மேடையுரை – சிந்திக்கும் கலை


காரைக்குடியில் இருந்து அந்தியூருக்கு பேருந்து இருப்பது என்ன அவசியத்திற்கு என்ற கேள்வி மாறி இப்போது சரி இருந்தா நல்லது தானே போறவங்க அலைச்சல் இல்லாமல் போகலாம், அப்படியே நாமலும் வெள்ளிமலை ‘நித்யவனம்’ பண்பாட்டு மையம் போகலாம்! 😉 அன்று இரவு 8:45 மணி முதல் பேருந்தில் பயணம் தொடங்கியது, அந்தியூர் வரை வந்தவர்கள் மூன்று நபர்கள் அதில் நான் ஒருவன் மட்டுமே பயணசீட்டு வாங்கி பயணம் செய்தவன் ;). விடியற்காலை 4:30 மணியளவில் அந்தியூர் வந்து சேர்ந்த… Read More மேடையுரை – சிந்திக்கும் கலை

சொல்லை பாதுகாக்கும் சந்தன அலமாரி


சாய்வு நாற்காலி, தோப்பில் முகம்மது மீரான். https://books.kalachuvadu.com/catalogue/Saivu-Naarkali_195/ முதல் தலைமுறை பவுரீன்பிள்ளை அவரது காலத்தில் ஊர் திரட்டி போரிட்டு நாட்டிற்கு கடமையாற்றியதற்காக திருவிதாங்கூர் அரசரின் நம்பிக்கைக்கு உகந்தவராகியபடியால் தென்பத்தன் கிராமத்திலும் திருவிதாங்கூர் பரப்பிலும் பெயர் சொல்லும் குடும்பமாக ஆகிறது அவரது குடும்பம். குடும்பத்தின் கௌரவ அடையாளமாக ஒரு அதபு பிரம்பு உள்ளது. பவுரீன்பிள்ளைக்கு பிறகு அவர்கள் வாரிசுகள் அந்த அதிகாரத்தை குடும்பத்தில் ஆதிக்கமாக நிலைநிறுத்தி, கௌரவம் என்பதற்காக பழைய கதைகளையே பேசி வரட்டு தனத்திற்காக கரைந்து போகிறார்கள்.… Read More சொல்லை பாதுகாக்கும் சந்தன அலமாரி

சின்ன சின்ன ஞானங்கள்


’ஞானம்’ எப்படி சின்னதாக இருக்க முடியும் என்பதிலேயே இந்த புத்தகம் ஒரு குறுகுறுப்பை கொடுக்கிறது. ‘சின்ன சின்ன ஞானங்கள்’ நாராயண குரு மரபு வழி தோன்றல் குரு நித்ய சைதன்ய யதி அவர்கள் மலையாளத்தில் எழுதிய நூல் – தமிழில் மொழியாக்கம் யூமா வாசுகி அவர்கள். குழந்தைகளின் தேக ஆரோக்கியத்தை கல்வி பெருமிதத்தை முன்னிலைப்படுத்தும் சூழலில் அவர்களது ஆன்ம ஆற்றலை போற்றவும் ஊக்குவிக்கவும் உதவும் நூல். குரு நித்யா அவர்களின் நூல் அறிமுகவுரையே சுவாரஸ்யமாக இருந்தது. குழந்தைகளுக்கு… Read More சின்ன சின்ன ஞானங்கள்

என்றென்றும் யானைகள்


ஆகஸ்டு மாதமே எழுதி முடித்துவிடவேண்டும் என்று நினைத்திருந்தேன், காரணம் இரண்டு, யானைகள் தினம் ஆகஸ்டு 13 மற்றொன்று இந்திய உச்ச நீதிமன்றம் யானைகளின் வலசை பாதையில் இருக்கும் ஆக்கிறமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. மதிநூட்பவாதி காட்டின் அதிபதியான யானை அனைவரையுமே கவர்ந்திலுக்கும் ஆச்சிரியம் தான். அதன் அடர் சாம்பல் நிறம், பார்வையின் ஊடுருவல் அதன் உருவத்தாலேயே அப்படியா என்று தெரியவில்லை ஆனால் என்றும் என் எண்ணம் அதன் பார்வையும் துதிக்கையுமே அதிகம் பேசுகிறது. அத்துனை பெரிய உருவம் கொண்டிருந்தாலும் அதன்… Read More என்றென்றும் யானைகள்

அறம் செய விரும்பு – அறிமுகம் (www.aramseyavirumbu.com)


வணக்கம்! இந்த பதிவில், என் நண்பர்களோடு (திரு சிவகுமார் மற்றும் திரு ராமசந்திரன்) இணைந்து http://www.aramseyavirumbu.com என்ற இணையதளத்தை அறிமுகபடுதுகின்றேன். “அறம் செய விரும்பு” என்றதுமே நீங்கள் வியுகித்தது சரியே! ஆம் இது ஆத்திசூடிக்கான பிரேத்தியேக இணையத்தளம். ஆத்திசூடிக்கு என்றுமே அறிமுகம் தேவைப்பட்டதில்லை ஆனால் இங்கு நாங்கள் எடுத்துள்ள முயற்சி ஆத்திசூடிக்கான “களஞ்சியம்” ஒன்றை உருவாக்குவதுதான்! இந்த முயற்சி பெரும் சவாலாகத்தான் உள்ளது, இன்றைய இடத்தில இருந்து ஒரு முழுமையான களஞ்சியம் என்று சொல்ல இன்னும் தூரம்… Read More அறம் செய விரும்பு – அறிமுகம் (www.aramseyavirumbu.com)