"The Signs" – the way we communicate

Archive for February, 2011

வருக – வரம் தருக!


எம் பெற்றோரும் உற்றோரும் மனமிணங்க ,
ஐம்பூதங்கள் அவையிருக்க , அக்னி முன்னிற்க,
தேவரும் மூவரும் ஒருசேர வாழ்த்தொலிக்க,
யாவரும் சபையில் சிறப்புற கொலுவீற்றிருக்க

ஒருவரும் அறியாமல் இரு மனம் மாற,
எம்மில் ஒருவர் மற்றவரின் வளைக்கரம் பற்ற,
தங்கள் மனமார்ரிந்த ஆசிகள் வந்தம்மை சேரும்,
என்று திருமண அழைப்புடன் பெருவரம் கோரும் …

– சிவகுமார் ஏகாம்பரம்

———————————————————————————————————————–

என் திருமண அழைப்பிதழிலில் அனைவரையும் வரவேற்ற கவிதை – முந்தய கவிதை பதிவுகள்

1. பொங்கல் வாழ்த்துக்கள் >>

2. என்னக்குள் எழும் ஐயம்கள் – கவிதை >>
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.


என்னக்குள் எழும் ஐயம்கள் – கவிதை


என்னக்குள் எழும் ஐயம்கள்

நியூ யார்க்  நகரம்

2007-10-23

நியூட்டனே!

இந்த பூமிப்பந்தின்

ஒரு பக்கத்தில் பந்தமும் , பாசமும்

மறுபக்கத்தில் பணமும் , புகழும் – வைத்து

இங்கும் அங்கும் என்னை இழுப்பதுதான்

புவியீர்ப்பு விசையோ?

டார்வினே!

இங்கிருக்கும்போது அங்குள்ள மக்களையும்

அங்கிருக்கும்போது இங்குள்ள வசதிகளையும்

எண்ணி ஏங்கும் மனம் கொண்டதால் – நான்

உண்மையில் குரங்கின் வம்சம் தானோ?

ஐன்ஸ்டீனே!

ஒருபக்கம் நிலையாக இருக்கும்போது

வருடமும் நிமிடம்போல உருண்டோடுவதும்

மறுபக்கம் நோக்கி நான் பறக்கும்போது

நிமிடமும் வருடம்போல உருமாறுவதும்

‘ரீலேடிவிட்டி’ தத்துவத்தின் சான்றுதானோ?

கலிலியோவே!

அஞ்சவேண்டாம்  – வேறேதும் ஐயமில்லை  என்னக்கு

எங்கு தொடங்கியதோ அங்கேயே முடியம்

வாழ்க்கைப் பயணத்தின் இறுதியில் உணர்ந்தது

என் உள்ளம் – உலகம் உருண்டையென்று .

– சிவகுமார் ஏகாம்பரம்

———————————————————————————————————————–

ஒரு வருட நட்பிற்கு பின் ஒரு இடைவேளி தொடங்கியபோது அன்பளிப்பாக வந்த கவிதை. இது தொடர்பான முந்தைய பதிவு >>

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.