"The Signs" – the way we communicate

Posts tagged “தமிழ்

அறம் செய விரும்பு – அறிமுகம் (www.aramseyavirumbu.com)


வணக்கம்!

இந்த பதிவில், என் நண்பர்களோடு (திரு சிவகுமார் மற்றும் திரு ராமசந்திரன்) இணைந்து www.aramseyavirumbu.com என்ற இணையதளத்தை அறிமுகபடுதுகின்றேன். “அறம் செய விரும்பு” என்றதுமே நீங்கள் வியுகித்தது சரியே! ஆம் இது ஆத்திசூடிக்கான பிரேத்தியேக இணையத்தளம்.

ஆத்திசூடிக்கு என்றுமே அறிமுகம் தேவைப்பட்டதில்லை ஆனால் இங்கு நாங்கள் எடுத்துள்ள முயற்சி ஆத்திசூடிக்கான “களஞ்சியம்” ஒன்றை உருவாக்குவதுதான்! இந்த முயற்சி பெரும் சவாலாகத்தான் உள்ளது, இன்றைய இடத்தில இருந்து ஒரு முழுமையான களஞ்சியம் என்று சொல்ல இன்னும் தூரம் செல்ல வேண்டியுள்ளது, அதற்காக திட்டங்கள் தீட்டி பயணத்திற்காக ஆயுத்தமாகி வருகிறோம்.

“அறம் செய விரும்பு”வை திரு சிவகுமார் அறிமுக படுத்தியதில் இருந்து,

“இந்த தளத்தின் வடிவமைப்பால், வாசகர்கள் இந்த தளத்தில் வந்து வாசித்து மட்டும் செல்லாமல், அவர்களை யோசிக்கவும் செய்து, அவர்களின் சிந்தனைச் சிதறல்களை பதிவும் செய்து, பின்வரும் வாசகர்களுக்கு மென்மேலும் சிறந்த கருத்துக்களை பல கோணங்களில் படைத்திட இயல்கிறது.ஆத்திச்சூடி மற்றும் அதன் பொருள் தேடி வரும் வாசகர்கள், எவ்வித தங்கு தடையுமின்றி எளிய முறையில் இந்த இணைய தளத்தில் பயணிக்கலாம். தாம் வாசித்த பகுதியை மேலும் மெருகேற்ற எண்ணும் தமிழ் ஆர்வலர்கள், தம்மைப்பற்றி பதிவு செய்துகொண்டு, தம்மால் திருத்தப்பட்ட பகுதியையும் பதிவு செய்யலாம். இவ்வாறு திருத்தி சீரமைக்கப்பட்ட பகுதிகள் தளப் பொறுப்பாளர்களின் ஒப்புதலோடு வாசகர்களின் பங்களிப்பாக பிரசுரிக்கப்படும்.”

ஆர்வலர்கள் இந்த முயற்சியில் தங்களை இணைத்துக்கொண்டு பங்களிப்புகளை சமர்ப்பித்து களஞ்சியத்தை மேலும் மேலும் வலுவாக்க வேண்டுகிறோம்.

ஒரு வலுவான களஞ்சியத்தை உருவாக்குவோம்! ஆத்திசூடியில் கேள்விகளோடும் அய்யங்களோடும் வருவோருக்கு பதிலளிப்போம், தமிழ் தெரிந்தோருக்கு ஆத்திசூடியின் மூலமாக மொழி விருந்து படைப்போம், ஆத்திசூடி தெரியாதோருக்கு பண்பாட்டை பகிர்ந்துதளிப்போம்!

நன்றி _/\_

Advertisements

வருக – வரம் தருக!


எம் பெற்றோரும் உற்றோரும் மனமிணங்க ,
ஐம்பூதங்கள் அவையிருக்க , அக்னி முன்னிற்க,
தேவரும் மூவரும் ஒருசேர வாழ்த்தொலிக்க,
யாவரும் சபையில் சிறப்புற கொலுவீற்றிருக்க

ஒருவரும் அறியாமல் இரு மனம் மாற,
எம்மில் ஒருவர் மற்றவரின் வளைக்கரம் பற்ற,
தங்கள் மனமார்ரிந்த ஆசிகள் வந்தம்மை சேரும்,
என்று திருமண அழைப்புடன் பெருவரம் கோரும் …

– சிவகுமார் ஏகாம்பரம்

———————————————————————————————————————–

என் திருமண அழைப்பிதழிலில் அனைவரையும் வரவேற்ற கவிதை – முந்தய கவிதை பதிவுகள்

1. பொங்கல் வாழ்த்துக்கள் >>

2. என்னக்குள் எழும் ஐயம்கள் – கவிதை >>
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.


என்னக்குள் எழும் ஐயம்கள் – கவிதை


என்னக்குள் எழும் ஐயம்கள்

நியூ யார்க்  நகரம்

2007-10-23

நியூட்டனே!

இந்த பூமிப்பந்தின்

ஒரு பக்கத்தில் பந்தமும் , பாசமும்

மறுபக்கத்தில் பணமும் , புகழும் – வைத்து

இங்கும் அங்கும் என்னை இழுப்பதுதான்

புவியீர்ப்பு விசையோ?

டார்வினே!

இங்கிருக்கும்போது அங்குள்ள மக்களையும்

அங்கிருக்கும்போது இங்குள்ள வசதிகளையும்

எண்ணி ஏங்கும் மனம் கொண்டதால் – நான்

உண்மையில் குரங்கின் வம்சம் தானோ?

ஐன்ஸ்டீனே!

ஒருபக்கம் நிலையாக இருக்கும்போது

வருடமும் நிமிடம்போல உருண்டோடுவதும்

மறுபக்கம் நோக்கி நான் பறக்கும்போது

நிமிடமும் வருடம்போல உருமாறுவதும்

‘ரீலேடிவிட்டி’ தத்துவத்தின் சான்றுதானோ?

கலிலியோவே!

அஞ்சவேண்டாம்  – வேறேதும் ஐயமில்லை  என்னக்கு

எங்கு தொடங்கியதோ அங்கேயே முடியம்

வாழ்க்கைப் பயணத்தின் இறுதியில் உணர்ந்தது

என் உள்ளம் – உலகம் உருண்டையென்று .

– சிவகுமார் ஏகாம்பரம்

———————————————————————————————————————–

ஒரு வருட நட்பிற்கு பின் ஒரு இடைவேளி தொடங்கியபோது அன்பளிப்பாக வந்த கவிதை. இது தொடர்பான முந்தைய பதிவு >>

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.


பொங்கல் வாழ்த்துக்கள்


பொங்கல் வாழ்த்துக்கள் -சிவகுமார் ஏகாம்பரம்

பொங்கல் வாழ்த்துக்கள்


அன்பு நண்பர் சிவகுமார் ஏகாம்பரம் எழுதிய கவிதை. நண்பர் என்னக்கு மற்றும் எங்களோடு உள்ள பல நண்பர்களுக்கு நல்ல சில கவிதைகளை அன்பளிப்பாக தந்துள்ளார். விளம்பரம் ஆகிவிடுமோ என்ற தன்னடக்கத்தில் தன்னோட கவிதைகள் என்ற போதிலும் ஒரு வலைப்பூ அமைத்து பதிவேற்ற மறுக்கிறார்!

இந்த வாழ்த்து கவிதை தொடங்கி நண்பர் என்னக்கு அளித்த மற்றும் சில கவிதைகளை பதிவேற்ற முயற்சிக்கின்றேன்.  நண்பர் அன்பளிப்பாக கவிதை அளித்த தருணங்கள்
*) ஒரு வருட நட்பு பின் ஒரு இடைவேளி தொடங்கியபோது – என் பணி முடிந்து மீண்டும் தாயகம் திரும்பிய தருணம்.
*) என் திருமண அழைபிதழில்


“இரண்டாயிர வருட பாரம்பரிய மிக்க குடி . . “கதையில் மட்டும்.


என்றும் போல் இன்றும் அது ஒரு விடியல் அவனுக்கு; அந்த எண்ணம் எழுந்து – மலர்ந்து – உதிர்ந்தது, இது ஒன்றும் புதிதல்லவே என்று அலட்சியம் செய்து அன்றாட பணிகளை தொடர்ந்தான்.

“அந்நிய பொருட்கள் நம் நாட்டில் ஊடுருவி பெரும் பங்கை பிடித்துவிட்டது, ஆணிவேர் ஒன்றும் வெகு தொழைவில் இல்லை. ஒரு தனி மனிதனாக/ மகாகனம் பொருந்திய பொது ஜனமாக இதை எப்படி கையாள்வது” என்பது தான் அது! அன்றாட பணிகளிடையே ஒய்வாக இருந்தாலும் அவன் எண்ண அலைகள் ஒய்வதாகயில்லை. ஒரு விவாதத்தின்போது தன் தரப்பே நியாயம் என்று காரசாரமான எதிர் எதிர் தரப்பு வாதங்கள் போல அவன் எண்ண அலைகள் இடைவிடாது மோதிகொண்டேயிருந்தது.

“௨௧(21) ஆம் நூற்றாண்டில் – உலகமயமாக்கல் கொள்கை மத்தியில் சுதேசியவாத கொள்கைகளை  கொண்டு கொடிபிடிகாதே!

– நம் நாட்டவர்கள் ஏற்றுமதி செய்வதில்லையா?

– நாட்டிருக்கு பெரும் பொருள் இட்டிதரும் நம் நிறுவனங்கள் எப்படி இதை சாதிக்கின்றது?? . .

*****************************

– சரி இப்படி இருக்கும் பட்சத்தில் எதை ஆதரிப்பாய், உள்நாட்டு நிறுவனங்கள் வெளிநாட்டு பொருட்களை இறக்குமதி செய்வதையா இல்லை வெளிநாட்டு நிறுவனங்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்வதையா?

***********************

பழம் பெரும் பாரம்பரியம் மிக்க நம் இனம் கண்டு சொன்ன உண்மைகளை ஏன் இலாப நோக்கத்தோடு மட்டுமே பார்க்கவேண்டும்??

– பூமியை தோண்டினால் இரும்பு, வைரம், தங்கம் செய்ய வல்ல தாதுக்கள் கிடைக்கும்; இது இலாப நோக்கத்தோடு பார்ப்பதால் நம்ப படுகிறது.

– மற்றவர்களை சார்ந்தே இருபது கூடாது; இதில் இலாபம் இல்லாமையால் ஏற்க மறுக்கபடுகிறது. இன்று, எரிபொருள், கோதுமை, சர்க்கரை இறக்குமதி இல்லையேல் நாட்டில் பெரும் பொருளாதார சிக்கல் ஏற்படாதா?! . . . ”

அவனுக்குள் எத்தனை எத்தனை கேள்விகள் தான். அவன் வரலாற்றில் அதிகம் ஆர்வம் கொண்டவன் என்பதாலோ, இரண்டாயிரம் வருடம் பாரம்பரியம் மிக்கது தன் நாடு என்பதை அறிந்தவன் என்பதாலோ, இந்த எண்ணங்கள் அவன் மனதில் போராடிக்கொண்டே  இருந்தது. வரலாறு எடுத்துரைக்கும் பல கசப்பான உண்மைகள் மற்றும் போராட்டங்கள் அனைத்திருக்கும் பெரும்பான்மை காரணம் “உரிமை மிட்பாகவே இருக்கும்”.

அவன் பல சமயங்களில் அலட்சியம் செய்தாலும் சில சமயம் விடையளிக்க முயற்சித்தான். நம் முன்னோர்கள் விட்டு சென்ற (முடிந்தவரை) சுதேசிவாத கொள்கை உதவும் என்று தோன்றியது, ஆக பட்டியலிட ஆரம்பித்தான் ஊடுருவலின் ஆதிக்கம் அதிகம் என்பதால் சிரமத்தில்தான் செயல்படுகிறான் . .

போராட்ட அலைகளை அமைதி படுத்தும் வரை அவன் முயற்சி தொடரும்.

அவனிற்கு உதவி செய்யலாம் என்றால் இந்த பட்டியலில் சுதேசி பொருட்களை பட்டியலிடுங்கள் >> (http://spreadsheets.google.com/ccc?key=0AoB1yKfw_nnCdHkwenlJMjNoS1owS3VGeDdzRjROVFE&hl=en)

இப்படியும் கையாளலாம் என்றால் பின்னோடமிண்டுங்கள். இல்லை இல்லை இந்த எண்ணமே தவறு என்றால் அறிவுரைகளை பின்னோட்டமிடுங்கள்.

குறிப்பு: தமிழில் இது என்னுடைய முதல் முயற்சி பிழை இருப்பின் பொருத்து திருத்தங்களை, இதர அறிவுரைகளையும் பின்னோட்டமிடுங்கள். நன்றி!