தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்


தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்

வாக்கு பதிவு நாள் : பங்குனி 30 (April 13th)
முடிவுகள் அறிவிக்கும் நாள் : சித்திரை 30 (May 13th)

எனது பார்வையில் –

இந்தியாவில் தமிழகம் பெரிய மாநிலங்களில் ஒன்று , 4.59 கோடி வாக்காளர்கள் கொண்ட மாநிலத்தில் ஒரே நாளில் தேர்தல் என்பது ஒரு சாதனையே! இதை சிறந்த முறையில் சாத்தியமாக்க, தேர்தல் ஆணையத்திற்கு வாழ்த்துக்கள்.

நிச்சியமாக மிண்ணணு வாக்கு பதிவு இயந்திரம் இல்லாமல் இது சாத்தியம்மில்லை. இது போன்ற முயற்சிகள் தான் மிண்ணணு இயந்திரங்கள் கண்டுபிடிப்புக்கான காரணமும் கூட. மேலும் கவனிக்க வேண்டிய மற்ற சில காரணங்களில் செலவை குறைத்தல், ஆள் பற்றாக்குறை சமாளித்தாலும் அடங்கும்.

இதுவரை சரி, ஏன் முடிவுகள் தெரிவிக்க ஒரு மாதம் தாமதமாக்க வேண்டும்? இதற்கு தேர்தல் ஆணையம் கூறும் முக்கிய காரணம் – தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் தேர்தல் நடக்க இருப்பதால் என்பதுதான்.

–> தேர்தல் போன்ற பெரிய காரியங்களுக்கு சம்மந்தபட்ட ஆணையங்கள், ஆணைய ஊழியர்கள் மற்றும் மாநில அரசாங்க ஊழியர்களை பணியில் அமர்த்துகிறது. இப்படி இருக்க எப்படி ஆள்பற்றாக்குறை ஒரு காரணமாகும் .

–> மற்றும் வாக்குபதிவு நடக்கும்போதே அந்த இயந்திரங்களில் பதியப்படும் வாக்குகள் எண்ணப்பட்டுவிடுகிறது. கடைசியில் அனைத்து இயந்திரங்களில் இருந்து அந்த எண்ணிக்கையை எடுத்து ஒருங்கிணைத்து முடிவுகள் வெளியிடப்படும். மிண்ணணு இயந்திரங்கள மூலம் வாக்கு எண்ணிக்கை பெறும் பகுதி இயந்திரமயமாக்கப்பட்டுவிட்டது.

–> இவை ஒருபுறம் என்றால், தமிழகத்தில் ஒரே நாளில் தேர்தல் சாத்தியம் என்றால் – ஏன் அதை வாக்குகள் எண்ணப்படும் நாளிற்கு ஒரு நாள் முன்னதாக இருக்க கூடாது? (சித்திரை 30 மற்றும் 31)

–> இத்தோடு இல்லாமல் ,ஒரு மாத கால இடைவேளியில் இந்த இயந்திரங்கள் எப்படி கையாளப்படும் என்பது தெரியவில்லை. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வரும் வரை, சட்ட விரோத செயல்களிருந்து பாதுகாக்க பல்வேறு காரணங்களுக்காக ஆள் மற்றும் பணவிரையம் ஆகலாம்.

–> இவை அனைத்தையும் கடந்து கடைசியாக, சித்திரை 30 வெளியாகும் முடிவுகளின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிடும்!

இதறக்கு இடையில் ஏதேனும் சட்டவிரோத செயல்கள் நடந்தால், இயந்திரங்கள் சேதபடுத்தப்பட்டால், திருடப்பட்டால் மற்றும் பல கரணங்களால் மீண்டும் தேர்தல் நடைபெறுமேயானால் இந்த தேர்தல் செலவு மக்கள் வரிப்பண விரையம் மட்டும் இல்லாமல் இயந்திரம் கண்டுபிடிக்கபட்டதன் அர்த்தம் சிதைக்கப்படும்.

இந்த தேர்தல் தேதிகளில் மாற்றம் ஏற்பட அரசியல் கட்சிகளின் குரல் உரக்க ஒலிக்கவேண்டும்!