"The Signs" – the way we communicate

Posts tagged “ஔவையார் பாடல்கள்

அறம் செய விரும்பு – அறிமுகம் (www.aramseyavirumbu.com)


வணக்கம்!

இந்த பதிவில், என் நண்பர்களோடு (திரு சிவகுமார் மற்றும் திரு ராமசந்திரன்) இணைந்து www.aramseyavirumbu.com என்ற இணையதளத்தை அறிமுகபடுதுகின்றேன். “அறம் செய விரும்பு” என்றதுமே நீங்கள் வியுகித்தது சரியே! ஆம் இது ஆத்திசூடிக்கான பிரேத்தியேக இணையத்தளம்.

ஆத்திசூடிக்கு என்றுமே அறிமுகம் தேவைப்பட்டதில்லை ஆனால் இங்கு நாங்கள் எடுத்துள்ள முயற்சி ஆத்திசூடிக்கான “களஞ்சியம்” ஒன்றை உருவாக்குவதுதான்! இந்த முயற்சி பெரும் சவாலாகத்தான் உள்ளது, இன்றைய இடத்தில இருந்து ஒரு முழுமையான களஞ்சியம் என்று சொல்ல இன்னும் தூரம் செல்ல வேண்டியுள்ளது, அதற்காக திட்டங்கள் தீட்டி பயணத்திற்காக ஆயுத்தமாகி வருகிறோம்.

“அறம் செய விரும்பு”வை திரு சிவகுமார் அறிமுக படுத்தியதில் இருந்து,

“இந்த தளத்தின் வடிவமைப்பால், வாசகர்கள் இந்த தளத்தில் வந்து வாசித்து மட்டும் செல்லாமல், அவர்களை யோசிக்கவும் செய்து, அவர்களின் சிந்தனைச் சிதறல்களை பதிவும் செய்து, பின்வரும் வாசகர்களுக்கு மென்மேலும் சிறந்த கருத்துக்களை பல கோணங்களில் படைத்திட இயல்கிறது.ஆத்திச்சூடி மற்றும் அதன் பொருள் தேடி வரும் வாசகர்கள், எவ்வித தங்கு தடையுமின்றி எளிய முறையில் இந்த இணைய தளத்தில் பயணிக்கலாம். தாம் வாசித்த பகுதியை மேலும் மெருகேற்ற எண்ணும் தமிழ் ஆர்வலர்கள், தம்மைப்பற்றி பதிவு செய்துகொண்டு, தம்மால் திருத்தப்பட்ட பகுதியையும் பதிவு செய்யலாம். இவ்வாறு திருத்தி சீரமைக்கப்பட்ட பகுதிகள் தளப் பொறுப்பாளர்களின் ஒப்புதலோடு வாசகர்களின் பங்களிப்பாக பிரசுரிக்கப்படும்.”

ஆர்வலர்கள் இந்த முயற்சியில் தங்களை இணைத்துக்கொண்டு பங்களிப்புகளை சமர்ப்பித்து களஞ்சியத்தை மேலும் மேலும் வலுவாக்க வேண்டுகிறோம்.

ஒரு வலுவான களஞ்சியத்தை உருவாக்குவோம்! ஆத்திசூடியில் கேள்விகளோடும் அய்யங்களோடும் வருவோருக்கு பதிலளிப்போம், தமிழ் தெரிந்தோருக்கு ஆத்திசூடியின் மூலமாக மொழி விருந்து படைப்போம், ஆத்திசூடி தெரியாதோருக்கு பண்பாட்டை பகிர்ந்துதளிப்போம்!

நன்றி _/\_