என்றென்றும் யானைகள்


4_5645

ஆகஸ்டு மாதமே எழுதி முடித்துவிடவேண்டும் என்று நினைத்திருந்தேன், காரணம் இரண்டு, யானைகள் தினம் ஆகஸ்டு 13 மற்றொன்று இந்திய உச்ச நீதிமன்றம் யானைகளின் வலசை பாதையில் இருக்கும் ஆக்கிறமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது.

மதிநூட்பவாதி காட்டின் அதிபதியான யானை அனைவரையுமே கவர்ந்திலுக்கும் ஆச்சிரியம் தான். அதன் அடர் சாம்பல் நிறம், பார்வையின் ஊடுருவல் அதன் உருவத்தாலேயே அப்படியா என்று தெரியவில்லை ஆனால் என்றும் என் எண்ணம் அதன் பார்வையும் துதிக்கையுமே அதிகம் பேசுகிறது. அத்துனை பெரிய உருவம் கொண்டிருந்தாலும் அதன் சாந்தத்தன்மையே அதன் அடையாளம். இந்த குணாதிசியத்தை நம்பி தான் மனிதன் யானைகளை நெருங்குகிறான். அதன் குட்டிகள் அடிக்கும் லூட்டி கண் கொள்ளாகாட்சி நேரில் பார்த்தது குறைவு தான் என்ற போதிலும் காணொளிகளில் பார்த்தது அதிகம். புத்தகத்தில் ஆசிரியரின் விவரனைகள் அதன் மொழியாக்கம் அதை அப்படியே நம் மனதில் காட்சியாக கொண்டுவந்துவிடுகிறது. 

படிமமாகவும் பாரதத்தின் தொன்மைகளிலும் ஆலமாக இடம் பெற்ற கணேசன் வழிபாடு முறைமைகளும் இந்த ஈர்ப்பிற்கு காரணமாக இருக்கலாம். அவன் யானை முகம் பெற்றதாலையே கணேசன் ஆனால் முதலில் ஏன் யானை முகம் பெற்றான்? அங்கு வைத்து கொண்டாடபடிவேண்டிய அவசியம் தான் என்ன? யானைகளை ஊர்களில் குறைவாக பார்த்திருக்கும் தலைமுறை என்ற முறையில் ஒரு வேளை விலங்கியல் பூங்கா அல்ல கோயிலில் மட்டுமே காண்டவர்களுக்கு இந்த கேள்வி இன்னும் பிரதானமாகவும் இருக்களாம் தான். யானை என்ற அடிப்படையில் இது அனைவருக்குமான புத்தகம் தான் என்றபொதிலும் குறிப்பாக இவர்களுக்கு இன்னும் பொருள்படுக்கூடும். சூழலியலில் துறையில் ஆர்வமிருப்பவர்களுக்கு அதிலும் மாணவர்களுக்கு ஒரு ஈர்ப்பை உண்டாக்கும். விவரனைகள் வழியாக ஆசிரியர் எடுத்துரைக்கும் அனுபவங்கள் இந்த துறையில் செயல்படாடுகள் பற்றி அறிய உதவும், தெரிந்தவர்கள் அவர்களது தொடர்புகள் எந்த அளவு அவசியம் என்பது புரியும். 

sukumarraman400x300

புத்தகத்தை பற்றிய அறிமுகத்திற்கு முன் ஆசிரியர் இராமன் சுகுமார் பற்றி சிறிய அறிமுகம் அவசியம். இவர் ஒரு சூழலியல் ஆய்வாளர் இந்தியாவின் முக்கிய சூழலியலாளர்களில் ஒருவர் தொடர் செயல்பாடுகளால் அறியபடுகிறவர். கூறிப்பாக இந்தியாவின் முதல் முற்சியான நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் அமைத்தில் பங்காற்றியவர். இந்தியா மற்றும் உலக அமைப்புகளுடன் இணைந்து ஆசிய யானைகளுக்காக அமைப்பை உருவாக்கி தொடர்ந்து செயல்பட்டு வருபவரும் கூட. அவரது துறையில் பல விருதுகளும் அங்கீகாரமும் பெற்றவர் கூறிப்பிடும் படியாக சிக்காகோ விலங்கியல் கூட்டுறவு அமைப்பின் விருது, ஜப்பானின் சர்வதேச காஸ்மோஸ் விருது. 

இந்த அடிப்படையில் ஒரு ஆய்வாளர் அவரது ‘ஆசிய யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான மோதல்’ ஆய்விலிருந்து வேண்டியதை தொகுத்த தனது அனுபவங்களை சேர்த்து அனைவரும் படிக்கும் படியாக எழுதிய நூல் இது.  ஆய்வு அறிக்கை என்ற கட்டுக்கோப்புத்தனமில்லாமல் இருப்பதால் வாசகர் வாசலை அடைந்துவிடுகிறது அதற்கு மேல் வாசகர் விருப்பம் சார்ந்தது. அதற்காக அவசியம் கூறிப்பிடவேண்டிய மொழிப்பெயர்ப்பு டாக்டர் ஜீவானந்தம் அவர்களுடையது. 

ஐந்து தலைப்புகளை கொண்டுள்ளது, ஆய்வு தலைப்பு அதன் நோக்கம் சுறுக்கமாக, யானைகளின் வளர்ச்சியும் குடும்ப அமைப்பும், மழை மற்றும் வரட்சி பருவகாலங்களுக்கு ஏற்ப யானைகளின் வலசை, யானைகளுக்கான அன்றைய பிரதான பிரச்சனையான தந்த கொள்ளை பற்றிய சிறிய தகவல்கள் – இன்றும் பிரதான பிரச்சனை தான் என்றால் கவலைக்கிடமான சங்கதிதான், தொன்மத்திலிருந்து வரலாற்றின் வழியாக இன்று வரை யானை பற்றிய தொகுப்பை தந்துவிட்டு பிறகு மோதல் பிரச்சனைக்கு தீர்வு என்றும் கருத்துக்களை முன்வைத்து அதற்காக ஆசிரியருக்கு கிடைத்த விருதும், பாராட்டும் மட்டுமில்லாமல் அதற்காக பெற்ற ஒரு விமர்சனத்தையும் பதிந்துவிடுகிறார். 

ஆசிரியர் மற்றும் ஆர்வம் சார்ந்த நண்பருடனான பயணம் என்று விவரனைகளை பயணக்கட்டுரை போல இருந்தாலும் அவ்வப்போது ‘தனது நண்பரின் பழைய சிறிய ரக காரில் சுற்றியது’, ’மலை சரிவில் விழகிடந்த ஜீப்பை காப்பாற்றியது’, ’அவர் தேடி கண்டுபிடிக்கும் 19 வயது இளம் ஜீப்’ என்று அவரது சிறு பகடிகள் இரசிக்குபடியாகவே இருக்கிறது. அதே போல் தனக்கு உதவிய நபர்களை முடிந்தவரை நினைவுபடுத்தி கூறிப்பிட்டுள்ளார் என்று தான் சொல்லவேண்டும். ஆம் ஆய்வாளர் என்பதை நினைவுபடுத்தும் இடங்கள் அவை, அனைவரையும் குறிப்பிடம் பொது அன்னாரது துறை பதவி என்று பட்டங்களோடான பெயராக தான் இருக்கும். தனது சூழலியல் துறை ஆர்வத்திற்கு தனது பாலிய கால நிகழ்ச்சி தான் காரணமாகயிருக்காலாம் என்று தனது குடும்பத்தார் சொன்னாலும் தனக்கு எப்படி இந்த ஆர்வம் வந்தது என்று தெரியாது என்று எடுத்துரைக்கிறார். எப்படி ஒரு ஆர்வம் ஏற்படளாம் என்று எடுத்துரைக்கும் கனம் அது. நாம் நிகழ்வுகளில் கனவமாக இருந்தால் நமக்கு எது வேண்டும் வேண்டாம் பிடிக்கும் பிடிக்காது என்பதில் தெளிவு பிறக்கும் என்று தொன்றியது. 

யானைகளின் குடும்ப அமைப்பு, ஆசிரியரது விவரனைகளிலிருந்து யானை என்பதை நீக்கிவிட்டால் அது மனித குடும்ப அமைப்புதான் என்று ஒருவர் வாதிடும் அளவு ஒற்றுமை. ஒன்று சொல்ல வேண்டும் குடும்ப தலைவர் என்று ஆண்களை முன்னிலைப்படுத்துகிற போக்கு பிற்காலத்தில் தான் ஏற்ப்பட்டது எப்படி இருப்பினும் குடும்பத்தில் பெண்களின் பங்களிப்பை, தார்மீக தலைமை என்பதை தவிர்க்கவே முடியாது இல்லையா அதை புரிந்துகொள்ளவேண்டும். அந்த அடிப்படையில் குடும்ப அமைப்பு தான் இந்த பெரிய ஜீவன்களை இன்றும் தொடரும் தொல்லைகளுக்கு மத்தியில் இத்தனை ஆயிரம் காலம் தொடர்ந்து போராடி இனத்தை பாதுகாத்து வலியன வாழம் முறையில் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.

ஈன்றும் காலம், குட்டிகளுக்கு இடையேயான இடைவேளி ஒரே குழுவில் குடுதல் தவிர்க்கப்படுகிறது என்றால் எப்படி வேற் குழுவின் அறிமுகம் கிடைக்கிறது தொடர்பு ஏற்படுகிறது என்று படிக்க சுவாரசியம் தான், இது வர்னனைகளில் இல்லாமல் நேரடியாக விவரிக்கப்பட்டிருந்தாலும் நமது கற்பனையை தட்டிவிட்டு படித்தால் அந்த சுவாரசியம் கூடும். அதாவது, ஒரு ஆண் யானை தன் குழுவுடன் முழுவதுமாக கட்டுப்பட்டு கூடவே இருப்பதில்லை தனியாகோ வேறு ஆண் யானை நட்புடன் திரிகிறது. அந்த பருவத்தில் வேறு குழுவில் இருக்கும் பெண் யானையை கண்டு அந்த குழுவில் சேர்ந்துவிடுகிறது சிறிது காலத்திற்கு. அதே போல் குழந்தை பராமரிப்பிலும் பெரிய அக்கறை காட்டுவதில்லை. அதற்காக முழுதாக குழுவிடம் இருந்து துண்டித்துக்கொள்வதுமில்லை.

asianelephant2

குழந்தை, இளமை, மத்திய வயது, முதுமை என்று பருவங்கள் உண்டு. முதிய பெண் தான் குடும்ப தலைவி, தனது குழுவை வழிநடத்துவது கட்டளை பிறப்பிப்பது என்று அனைத்தும். எப்போது குடும்பம் ஆகிறது, பிற குழுக்கள் எப்படி உண்டாகிறது (உதாரணம் – சகோதரியின் குழு), பிற குழுக்களை சந்திப்பது அவர்களுடன் தொடர்பு என்று குடும்ப சூழல் பேசப்படுகிறது. ஒரு முறை தான் ஒரு புதரிலிருந்து கண்காணிக்கையில் மீனாட்சி துதிக்கை மேல் உயர்த்தி முகர்ந்து மனிதர் இருப்பை அறிந்து, தன் குழு உறுப்பினர்கள் வாயில் துதிக்கையை வைத்து குறிப்பு உணர்த்துவது இது அவர்களது பதட்டத்தை தனிப்பது, குழுவில் இருக்கும் ஒரு இளம் ஆண் யானை வேகமா காதுகளை உயர்த்தி விரட்டும் தொரனையில் ஒடிவந்தது இவர் பின் வாங்கி தனது ஜீப்பை கடந்து மறைந்து கொள்கிறார் வந்த யானை வண்டி பார்த்துவிட்டு சென்று விடுகிறது. இது போல் அரட்டல் உருட்டல் அநேகமாக குழுவிலிருக்கும் இளம் யானை தான் முதல் ஆளாக செய்யும் அதை தலைமை யானை அனுமதிக்கிறது தேவையான பொது கட்டுபடுத்துகிறது. குழுவாக வலசை செல்கிறபோது அதன் அமைதி ஆச்சிரியம் தான். மனிதர்கள் இந்த இடத்தில் தான் அகங்காரம் என்ற மிகப்பெரிய இடத்தில் வீழ்ந்துவிடுகிறார்களோ என்று தொன்றுகிறது, குழுவாக சேர்ந்துவிட்டால் அங்கே அறங்கேறும் ஆர்ப்பாட்டங்கள் தான் எத்தனை எத்தனை. குறிப்படவேண்டிய மற்றொன்று தேவையான சந்தர்ப்பங்களில் எதிரியை அரட்டுகிறது, எச்சரிக்கிறது என்றாலும் அவசியம் என்ற போது மட்டுமே தாக்குகிறது இது அனாவசிய பதற்ற குணம் சற்றும் இல்லாது உயிர் என்பதை காட்டுகிறது.

பதற்றம் குறிப்பு, வலசை, கேளா ஓலி தொடர்பு, பருவ காலம், ஈன்றும் காலம், அதே குழுவில் உள்ள ஆண் பெண் கூடுகையை தவிர்ப்பது, காதுகளின் அசைவுகள், துதிக்கையின் அசைவுகளின் அற்த்தம் என்று ஆங்காங்கே ஆசிரியர் சுவாரசியமான நிகழ்வுகள் வழியாக சொல்லி செல்லும் தகவல் அனைத்தும் கவனிக்கபட வேண்டியவை. நகரத்தில் வாழும் மனிதனுக்கு இது எதற்கு என்று வினவினால் கோயில் யானைகள் ஏன் முகாமற்கு அழைத்து செல்லப்படுகிறது என்பது புரிந்துக்கொள்ளவாவது என்று சொல்வேன். இந்த தகவலுனுடாக வாசகர்களுக்கு மீனாட்சி, தாரா, விநாய், விலகி தந்தங்களுடைய யானை, குறுக்காக தந்தங்களுடைய யானை என்று பலரது அறிமுகம் கிடைத்துவிடும். வளர்ப்பு யானைகள் பற்றிய சிறு சிறு தகவல்களும் உண்டு இவர்களது பணி அளப்பரியது காட்டு யானைகளை கட்டுப்படுத்த முடிந்தவர்கள் இவர்களே.

கேளா ஒலிகள் தொடர்புகள் படித்தபிறகு யானைகளை மனிதன் கட்டுபடுத்துகிறான் என்பது மனிதனின் அகங்காரப் பார்வை மட்டுமே இயற்கை சார்பில் நடுநிலையோடு பார்த்தால் யானை மற்றொரு யானையிடம் (கும்கி, வளர்ப்பு) ஒரு வகையில் கட்டுபடுகிறது என்று தான் நம்ப தொன்றுகிறது. நான் இருக்கிறேன் நம்பி வா என்றோ, ‘மனிதன் ஒரு மகத்தான சல்லிபயல்’ நீ அடங்கமாட்டேன் என்றதும் சரி என்று விட்டுவிடப்போவதில்லை பார்த்துக்கொள்ளலாம் வா  என்றொ, கட்டுப்பாடான சுதந்திரம் உண்டு வனவுலா வந்து செல்லலாம் நம்ம குடும்பங்களை பார்த்து செல்லலாம் என்றொ, பேசிக்கொள்கிறது.

யானைகளின் மதி நூட்பம் மகத்தானது, மனிதர்கள் மலையடிவாரங்களில் வலசை பாதைகளை ஆக்கிறமித்து தனக்கான வருவாய் நிலமாக மாற்றி அதை யானைகளிடமிருந்து பாதுகாக்க வேலி, அகழி என்று என்ன செய்த போதிலும் அதை யானைகள் எப்படி மிருகிறது என்பது சுவாரசியம், தந்தங்களால், மண்மூட்டை போன்ற தனது கால்களால் மதித்து, அகழிகளை கறையை உடைத்து நடக்கும் படியாக பாதையாக மாற்றிக்கொள்ளுதல் என்று அட்டகாசபடுத்துகிறது. இங்கே தான் விநாய், ஒற்றை கொம்பன் என்ற யானைகள் நாயகர்கள். அதே போல், தலைமுறையில் தகவல்களை கடத்துகிற திறமை, தற்காலத்தில் தந்தங்கள் இல்லாத ஆண் யானைகள் அதிகரித்து விருகிறது வேட்டையாடப்படுகிறதிலிருந்து தற்காத்துக்கொள்ள செய்திகளை கடத்தி அடுத்த தலைமுறை இந்த ஆபத்தில் இருந்து தப்பித்துக்கொண்டுள்ளது.

பாரதத்தின் அறிவு சுரங்கத்திலிருந்து, கௌடல்யரின் அர்த்தசாஸ்திரத்தில் யானை பற்றிய சிறு குறிப்பை தருகிறார் இது இங்கு யானைகளுக்கு இருந்து முக்கியத்துவத்தை பறைசாற்றுகிறது. இந்த கருத்து பதிவான காலவரிசையில் பார்த்தால் புருஸோத்தமனின் யானைப்படை, யானைகளை கொண்டு சாணக்கியர் தந்திரம், இராஜராஜன் யானைப்படை என்று வியப்பதில் ஆச்சரியம் தேவையில்லை தான்.

கடைசியாக ஆசிரியர் அவரது ஆய்வின் தீர்வாக முன்வைப்பதை படித்ததும் நமக்கு சற்று அதிர்ச்சி தான், மனிதர்கள் ஆக்கிறமிப்பை கூறித்தாலும் இப்படி தாக்குதலுக்கு பழகிய ஆண் யானைகளை களையவேண்டும் என்பது தான் அது. பழகிய விநாய், ஒற்றை கொம்பன் போன்ற நாயகர்கள் வீழ்த்தப்படுவேண்டும். 

ஒற்றை வரிகளில் சில பெரும் ஆளுமைகள் வந்து போகிறார்கள், மாதவ் காட்கில், டாக்டர் கே மற்றும் தியோடர் பாஸ்கர். சூழியலில் ஆர்வமிக்கவர்கள் இந்த ஆளுமைகளை அறிந்து கொள்ளவேண்டும்.

புத்தகம் – என்றென்றும் யானைகள், இராம் சுகுமாரன்.

தமிழில் – டாக்டர் ஜீவானந்தம்

பதிப்பகம் – தமிழினி

https://www.udumalai.com/enrenrum-yanaigal.htm

 

அறம் செய விரும்பு – அறிமுகம் (www.aramseyavirumbu.com)


வணக்கம்!

இந்த பதிவில், என் நண்பர்களோடு (திரு சிவகுமார் மற்றும் திரு ராமசந்திரன்) இணைந்து www.aramseyavirumbu.com என்ற இணையதளத்தை அறிமுகபடுதுகின்றேன். “அறம் செய விரும்பு” என்றதுமே நீங்கள் வியுகித்தது சரியே! ஆம் இது ஆத்திசூடிக்கான பிரேத்தியேக இணையத்தளம்.

ஆத்திசூடிக்கு என்றுமே அறிமுகம் தேவைப்பட்டதில்லை ஆனால் இங்கு நாங்கள் எடுத்துள்ள முயற்சி ஆத்திசூடிக்கான “களஞ்சியம்” ஒன்றை உருவாக்குவதுதான்! இந்த முயற்சி பெரும் சவாலாகத்தான் உள்ளது, இன்றைய இடத்தில இருந்து ஒரு முழுமையான களஞ்சியம் என்று சொல்ல இன்னும் தூரம் செல்ல வேண்டியுள்ளது, அதற்காக திட்டங்கள் தீட்டி பயணத்திற்காக ஆயுத்தமாகி வருகிறோம்.

“அறம் செய விரும்பு”வை திரு சிவகுமார் அறிமுக படுத்தியதில் இருந்து,

“இந்த தளத்தின் வடிவமைப்பால், வாசகர்கள் இந்த தளத்தில் வந்து வாசித்து மட்டும் செல்லாமல், அவர்களை யோசிக்கவும் செய்து, அவர்களின் சிந்தனைச் சிதறல்களை பதிவும் செய்து, பின்வரும் வாசகர்களுக்கு மென்மேலும் சிறந்த கருத்துக்களை பல கோணங்களில் படைத்திட இயல்கிறது.ஆத்திச்சூடி மற்றும் அதன் பொருள் தேடி வரும் வாசகர்கள், எவ்வித தங்கு தடையுமின்றி எளிய முறையில் இந்த இணைய தளத்தில் பயணிக்கலாம். தாம் வாசித்த பகுதியை மேலும் மெருகேற்ற எண்ணும் தமிழ் ஆர்வலர்கள், தம்மைப்பற்றி பதிவு செய்துகொண்டு, தம்மால் திருத்தப்பட்ட பகுதியையும் பதிவு செய்யலாம். இவ்வாறு திருத்தி சீரமைக்கப்பட்ட பகுதிகள் தளப் பொறுப்பாளர்களின் ஒப்புதலோடு வாசகர்களின் பங்களிப்பாக பிரசுரிக்கப்படும்.”

ஆர்வலர்கள் இந்த முயற்சியில் தங்களை இணைத்துக்கொண்டு பங்களிப்புகளை சமர்ப்பித்து களஞ்சியத்தை மேலும் மேலும் வலுவாக்க வேண்டுகிறோம்.

ஒரு வலுவான களஞ்சியத்தை உருவாக்குவோம்! ஆத்திசூடியில் கேள்விகளோடும் அய்யங்களோடும் வருவோருக்கு பதிலளிப்போம், தமிழ் தெரிந்தோருக்கு ஆத்திசூடியின் மூலமாக மொழி விருந்து படைப்போம், ஆத்திசூடி தெரியாதோருக்கு பண்பாட்டை பகிர்ந்துதளிப்போம்!

நன்றி _/\_

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்


தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்

வாக்கு பதிவு நாள் : பங்குனி 30 (April 13th)
முடிவுகள் அறிவிக்கும் நாள் : சித்திரை 30 (May 13th)

எனது பார்வையில் –

இந்தியாவில் தமிழகம் பெரிய மாநிலங்களில் ஒன்று , 4.59 கோடி வாக்காளர்கள் கொண்ட மாநிலத்தில் ஒரே நாளில் தேர்தல் என்பது ஒரு சாதனையே! இதை சிறந்த முறையில் சாத்தியமாக்க, தேர்தல் ஆணையத்திற்கு வாழ்த்துக்கள்.

நிச்சியமாக மிண்ணணு வாக்கு பதிவு இயந்திரம் இல்லாமல் இது சாத்தியம்மில்லை. இது போன்ற முயற்சிகள் தான் மிண்ணணு இயந்திரங்கள் கண்டுபிடிப்புக்கான காரணமும் கூட. மேலும் கவனிக்க வேண்டிய மற்ற சில காரணங்களில் செலவை குறைத்தல், ஆள் பற்றாக்குறை சமாளித்தாலும் அடங்கும்.

இதுவரை சரி, ஏன் முடிவுகள் தெரிவிக்க ஒரு மாதம் தாமதமாக்க வேண்டும்? இதற்கு தேர்தல் ஆணையம் கூறும் முக்கிய காரணம் – தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் தேர்தல் நடக்க இருப்பதால் என்பதுதான்.

–> தேர்தல் போன்ற பெரிய காரியங்களுக்கு சம்மந்தபட்ட ஆணையங்கள், ஆணைய ஊழியர்கள் மற்றும் மாநில அரசாங்க ஊழியர்களை பணியில் அமர்த்துகிறது. இப்படி இருக்க எப்படி ஆள்பற்றாக்குறை ஒரு காரணமாகும் .

–> மற்றும் வாக்குபதிவு நடக்கும்போதே அந்த இயந்திரங்களில் பதியப்படும் வாக்குகள் எண்ணப்பட்டுவிடுகிறது. கடைசியில் அனைத்து இயந்திரங்களில் இருந்து அந்த எண்ணிக்கையை எடுத்து ஒருங்கிணைத்து முடிவுகள் வெளியிடப்படும். மிண்ணணு இயந்திரங்கள மூலம் வாக்கு எண்ணிக்கை பெறும் பகுதி இயந்திரமயமாக்கப்பட்டுவிட்டது.

–> இவை ஒருபுறம் என்றால், தமிழகத்தில் ஒரே நாளில் தேர்தல் சாத்தியம் என்றால் – ஏன் அதை வாக்குகள் எண்ணப்படும் நாளிற்கு ஒரு நாள் முன்னதாக இருக்க கூடாது? (சித்திரை 30 மற்றும் 31)

–> இத்தோடு இல்லாமல் ,ஒரு மாத கால இடைவேளியில் இந்த இயந்திரங்கள் எப்படி கையாளப்படும் என்பது தெரியவில்லை. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வரும் வரை, சட்ட விரோத செயல்களிருந்து பாதுகாக்க பல்வேறு காரணங்களுக்காக ஆள் மற்றும் பணவிரையம் ஆகலாம்.

–> இவை அனைத்தையும் கடந்து கடைசியாக, சித்திரை 30 வெளியாகும் முடிவுகளின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிடும்!

இதறக்கு இடையில் ஏதேனும் சட்டவிரோத செயல்கள் நடந்தால், இயந்திரங்கள் சேதபடுத்தப்பட்டால், திருடப்பட்டால் மற்றும் பல கரணங்களால் மீண்டும் தேர்தல் நடைபெறுமேயானால் இந்த தேர்தல் செலவு மக்கள் வரிப்பண விரையம் மட்டும் இல்லாமல் இயந்திரம் கண்டுபிடிக்கபட்டதன் அர்த்தம் சிதைக்கப்படும்.

இந்த தேர்தல் தேதிகளில் மாற்றம் ஏற்பட அரசியல் கட்சிகளின் குரல் உரக்க ஒலிக்கவேண்டும்!

வருக – வரம் தருக!


எம் பெற்றோரும் உற்றோரும் மனமிணங்க ,
ஐம்பூதங்கள் அவையிருக்க , அக்னி முன்னிற்க,
தேவரும் மூவரும் ஒருசேர வாழ்த்தொலிக்க,
யாவரும் சபையில் சிறப்புற கொலுவீற்றிருக்க

ஒருவரும் அறியாமல் இரு மனம் மாற,
எம்மில் ஒருவர் மற்றவரின் வளைக்கரம் பற்ற,
தங்கள் மனமார்ரிந்த ஆசிகள் வந்தம்மை சேரும்,
என்று திருமண அழைப்புடன் பெருவரம் கோரும் …

– சிவகுமார் ஏகாம்பரம்

———————————————————————————————————————–

என் திருமண அழைப்பிதழிலில் அனைவரையும் வரவேற்ற கவிதை – முந்தய கவிதை பதிவுகள்

1. பொங்கல் வாழ்த்துக்கள் >>

2. என்னக்குள் எழும் ஐயம்கள் – கவிதை >>
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

என்னக்குள் எழும் ஐயம்கள் – கவிதை


என்னக்குள் எழும் ஐயம்கள்

நியூ யார்க்  நகரம்

2007-10-23

நியூட்டனே!

இந்த பூமிப்பந்தின்

ஒரு பக்கத்தில் பந்தமும் , பாசமும்

மறுபக்கத்தில் பணமும் , புகழும் – வைத்து

இங்கும் அங்கும் என்னை இழுப்பதுதான்

புவியீர்ப்பு விசையோ?

டார்வினே!

இங்கிருக்கும்போது அங்குள்ள மக்களையும்

அங்கிருக்கும்போது இங்குள்ள வசதிகளையும்

எண்ணி ஏங்கும் மனம் கொண்டதால் – நான்

உண்மையில் குரங்கின் வம்சம் தானோ?

ஐன்ஸ்டீனே!

ஒருபக்கம் நிலையாக இருக்கும்போது

வருடமும் நிமிடம்போல உருண்டோடுவதும்

மறுபக்கம் நோக்கி நான் பறக்கும்போது

நிமிடமும் வருடம்போல உருமாறுவதும்

‘ரீலேடிவிட்டி’ தத்துவத்தின் சான்றுதானோ?

கலிலியோவே!

அஞ்சவேண்டாம்  – வேறேதும் ஐயமில்லை  என்னக்கு

எங்கு தொடங்கியதோ அங்கேயே முடியம்

வாழ்க்கைப் பயணத்தின் இறுதியில் உணர்ந்தது

என் உள்ளம் – உலகம் உருண்டையென்று .

– சிவகுமார் ஏகாம்பரம்

———————————————————————————————————————–

ஒரு வருட நட்பிற்கு பின் ஒரு இடைவேளி தொடங்கியபோது அன்பளிப்பாக வந்த கவிதை. இது தொடர்பான முந்தைய பதிவு >>

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

இந்திய குடியரசு தினம் – பகுதி ௨(2)


இந்திய குடியரசு தினம் – பகுதி ௨(2)

இந்திய குடியரசு தினம் என்றால் என்ன? என்று தொடங்கி பல கேள்விகள், இதில் சில கேள்விகளுக்கு அறிந்த விடையை பகிர்ந்து கொள்கின்றேன்.
சரி, இந்திய குடியரசு தினம் என்றால்”முதன் முறையாக இந்திய மக்களுக்கான சட்டத்தை இயற்றிய நாள் – ௨௬ ஜனவரி ௧௯௫௦ (26 Jan 1950)” என்று ஒரு வரியில் கூறிவிடலாம். ஆனால், இந்த ஒரு வரிக்கு பின் இருக்கும் வரலாற்றை கவனிக்கும் பொழுது, இந்திய அரசியல் குறித்த தெளிவான புரிதல் ஏற்படுகிறது. இந்த புரிதல் நம் அனைவருக்கும் அவசியமென்றே கருதிகின்றேன்.

வரலாறு ௧௮௫௭ (1857) ஆண்டு, இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டத்தில் இருந்து தொடங்குகின்றது,
௧௮௫௭ (1857) – ஒரு கிளர்ச்சியாக ஆரம்பித்து பின் முதல் சுதந்திர போராட்டமாக         மாறுகிறது – பின் அடக்கபடுகிறது – இதை தொடர்ந்து இந்திய மக்கள் கருத்தை ஒத்த அரசு அமைக்க பிரிட்டிஷ் முடிவு.

௧௮௯௨ (1892) – இந்திய கவுன்சில்கள் சட்டம் அறிமுகம் – இதன்படி அரசாங்கத்தின் வரவு/ செலவு விவாதிக்க அதிகாரம் மற்றும் நிர்வாகத்தை நேரே கேள்விகேட்கும் அதிகாரம். ஆனால் வாக்குரிமை கிடையாது.

௧௯௧௭ (1917)  – பிரிட்டிஷ் இந்திய தன்னாட்சி அடைவதே இலட்சியம் என்ற இந்தியாவின் கருத்தை ஒப்புக்கொண்டது.

௧௯௧௯ (1919) –  இந்திய ஆட்சி சட்டப்படி மாகாணங்களில் இரட்டை ஆட்சி ஏற்படுத்துவது – மத்தியில் மேல் சபை கீழ் சபை அமைப்பது என்று தீர்மானம்.

௧௯௨௦ (1920)  – தீர்மானத்தை தொடர்ந்து – முதல் தேர்தல்

௧௯௨௪ (1924) – மீண்டும் ஒரு தேர்தல் – தேசிய கோரிக்கை என்ற தீர்மானம் – சட்டசபை பெரிதாக என்ன சாதித்துவிடபோகிறது என்ற கேள்வி – இந்த கேள்வியை பிரிட்டிஷ் ஒப்புகொள்ளுதல்

௧௯௨௮ (1928) – பூரண சுதந்திரம் மிக்க நாடாளுமன்றம் வேண்டும் என்ற கோரிக்கை – பம்பாய் நகரில் நடந்த மாநாட்டில் பண்டிட் மோதிலால் நேரு தலைமையில் இந்தியாவிற்கு ஒரு அரசியல் அமைப்பு தயாரிக்கும் குழு அமைதல். இந்த குழுவின் பிற முக்கிய உறுப்பினர்கள் திரு சி.ஆர்.தாஸ், திரு சத்யமூர்த்தி, திரு முகமது அலி சின்னா, திரு புலாபை தேசாய்.

௧௯௨௯ (1929) – இந்த குழு ஒரு அறிக்கை சமர்ப்பிக்கின்றது – இதை தொடர்ந்து முதல் வட்ட மேசை மாநாடு – இந்த மாநாடு அதிக மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் முடிவடைகின்றது

௧௯௩௨ (1931) – இரண்டாம் வட்ட மேசை மாநாடு – மகாத்மா காந்தி கலந்து கொள்கிறார் – வகுப்பு வித்தியாசம் பிரச்சனைகள் காரணமாக பெரும் உடன்பாடு எதுவும் எட்டபடவில்லை.

௧௯௩௨ (1932) – முன்றாம் வட்ட மேசை மாநாடு – ஒரு கூட்டு நாடாளுமன்ற குழு நிறுவபடுகிறது – இந்த குழு சில பரிந்துரைகள் செய்கிறது.

௧௯௩௫ (1935) – இந்த பரிந்துரைகளை “இந்திய அரசாங்க மசோதா” என்று பிரிட்டிஷ் நாடாளுமன்றம் நிறைவேற்றுகிறது.

௧௯௪௧ (1942) – இந்த ஆண்டு வரை நிலையான மக்கள் ஆட்சி நடைபெறவில்லை. இதற்கிடையில், கவர்னர்களுக்கு சிறப்பு அதிகாரம் குறித்த சர்ச்சை – இந்திய உலக போரில் சேர்வது குறித்த கருது வேற்பாடு – பாகிஸ்தான் பிரிவினை கோரிக்கை என்ற காரணங்களை காட்டி எந்த முடிவும் சொல்லாமல் பிரிட்டிஷ் இழுத்தடிப்பு.

௧௯௪௬ (1946) – ப்ரிடைனில் தொழிற்கட்சி  ஆட்சி அமைத்தல் – இந்தியாவிற்கு ஒரு அரசியல் நிர்ணய சட்டம் அமைப்பதற்காக ஒரு அரசியல் சட்டசபை அமைக்கபடுகிறது. இதன் துணை தலைவர் பண்டிட் ஜவார்ஹளால் நேரு. பிரிட்டிஷ் அமைச்சர்கள் தூதுக்குழு தெரிவித்த யோசனைப்படியே இந்த அரசியல் சட்ட நிர்ணய சபை அமைக்கப்பட்டது. இதுவே, சுதந்திர இந்தியாவில் சிலகாலம் சட்டசபையாகவும் செயல்பட்டது.

௧௯௪௭ (1947) – ஆகஸ்டு ௧௪ – ௧௫ (August 14-15) நள்ளிரவில் இந்த அமைப்பே பிரிட்டிஷ் ஆட்சியிடம் இருந்து இந்திய அரசாங்க ஆட்சி அதிகாரத்தை முறையாக ஏற்றுகொண்டது.

இந்தியாவிற்கு ஏற்ற அரசியல் சட்டம் இயற்றும் மிகபெரும் பணியை இந்த சபை மேற்கொண்டது இந்த சபையில் முனைவர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் பங்கு கணிசமானது. இந்த சபைக்கு முனைவர் ராஜேந்திர பிரசாத் தலைமை வகித்தார். சுமார் முன்று ஆண்டு காலம் அக்கறையுடன் தயாரான “இந்திய அரசியல் சட்டம்” இந்த அரசியல் சட்ட நிர்ணய சபையில் ௧௯௪௯ நவம்பர் ௨௬ (1949 Nov 26) ஆம் நாள் அங்கீகரிக்கப்பட்டது.

௧௯௫௦ (1950) – ஜனவரி ௨௬ (January 26) ஆம் நாள் இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்தது. இந்நாளே இந்திய குடியரசு நிறுவப்பட்டது.

இந்த சபை தலைவரான திரு முனைவர் ராஜேந்திர பிரசாத் முதல் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், இதே சபை இடைகால நாடாளுமன்றமாக செயல்பட்டது.

௧௯௫௨ (1952) – முதல் குடியரசு பொது தேர்தல்!

இந்திய குடியரசு தினம் – பகுதி ௧ (1) >>
தகவலுக்கு நன்றி _/\_ – “நமது பார்லிமென்ட் (தமிழில்) – தம்பி சீனிவாசன்”,  பிரசுர பிரிவு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், இந்திய அரசாங்கம். விக்கிபீடியா.

கலாச்சாரமும் பொருளாதாரமும் – இந்தியா (Culture and Economy – India)


துக்ளக் 41 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி பற்றி படிக்கையில் 40 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சியை காணநேரிட்டது. அதில் கீழ் வரும் கருத்து அனைவருக்கும் தெரியும் பட்சத்தில் நன்மை என்று பட்டது.

குடும்பம் சார்ந்த வாழ்க்கைமுறை கொண்ட நம் கலாச்சாரம் நம் நாட்டின் பொருளாதாரத்தை எந்த விதத்திலையாவது பாதிக்கின்றதா? – ஆம், என்கின்றார் திரு.குருமூர்த்தி.

 

முதலில் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை பொது ஐன மக்களுக்கு புரியாத வண்ணம் செய்தமை குறித்து பொருளாதார அறிஞர்களை சாடுகிறார், பின் சமிபமாக உலகம் சந்தித்த ‘பொருளாதார நெருக்கடியை’யும் அதில் நம் நாடு பேராபத்திலிருந்து தப்பித்தது குறித்தும் எளிமையாக குறி புரிய வைக்க முயற்சிக்கிறார்.

http://www.youtube.com/watch?v=l6XoVsUquc0

இந்த கருத்துக்கள் 6 – 10 நிமிடங்களிள் இடம்பெற்றுள்ளது.

சாராம்சம் – நம் பாரம்பரியம் நமக்கு கற்றுதந்த பழக்கங்களின் ஒன்று சிறு சேமிப்பு, நம் சேமிப்பில் கனிசமான பங்கு வகிப்பது பணம், இவை பெரும்பாளும் வங்கிகளிளே தான் சேமிக்கப்படுகிறது. இப்படியாக சேர்க்கப்பெற்ற தொகை ரூபாய் 7 இலட்சம் கோடி! இந்த தொகையிலிருந்து ரூபாய் 4 இலட்சம் கோடியை வங்கிகளிடத்தேயிருந்து கடனாக பெற்றுதான் நம் நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை சமாளித்தது. கூடுதல் செய்தியாக, நம் நாட்டு உற்பத்தி உள்நாட்டு தேவைகளினாளையே ஊந்தப்படுகிறது, சிறிய பங்காக எற்றுமதியும் அடக்கம்.

சிறு சேமிப்பை அவசியபடுத்துவது குடும்பம் என்ற அமைப்பு, இப்படியாக தான் நம் கலாச்சாரம் நம் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கின்றது என்கிறார்.

———————————————————————

இப்படியான குடும்பம் அமைப்பும் சிறு சேமிப்பு பழக்கமும் அதிகம் இல்லாதால் தான் மேற்க்கத்தைய நாடுகள் உடனடியாக இது போன்ற பொருளாதார நெருக்கடிகளிள் இருந்து தற்காத்து கொள்ளமுடிவதில்லை!

இது போன்ற கருத்துக்களை அறாயிந்து பார்ப்பதைவிட நன்மை செய்யும் பட்சத்தில் கருத்துக்களை ஏற்று செயல்படுத்த முயற்ச்சிப்போம்.

===========================================================

In English: Simply, it all tries explain that a countries culture does impact that countries economy. That is, for instance in India, we live by family values which has thought us to make small savings. And mostly it happens in currency and that has accumulated to Rs.7 Lac Crores mostly in banks. When there was a hard time in past, it has option to take Rs.4 Lac Crores on loan from countries bank and adjust with it.

===========================================================