மறைந்த ஜனநாயக அரசியல் – மேடையேறிய அநாவசியங்கள் – ஆந்திர அரசியல்

என் கருத்துக்களை இங்கே பகிர்ந்துகொள்கின்றேன். இங்கே பட்டியலிடப்பட்டவை என் சொந்த எண்ணம் மற்றும் ஆய்வறிக்கையை மேலோட்டமாக படித்ததில் இருந்து என்னில் எழுந்த எண்ணங்கள்.

ஸ்ரீ கிருஷ்ணா குழுமத்தின் அறிக்கையில் இருந்து “After considering all aspects, the Committee found the balance tilting in favour of keeping the state united, though some valid and strong reasons that had continued to cause discontent in Telangana region since its merger indicated that the demand for separation was also not entirely unjustified. All these
aspects have been discussed in detail in Chapter 9 of the Report and conclusions arrived at.” – ஒரு ஆண்டு காலம் நடந்த ஆய்வில் ஒன்று பட்ட ஆந்திரம் என்ற ஒரு தீர்வு மேலோங்குகிறது. இந்த தீர்வையே நான் பின் வரும் காரணங்களுக்காக ஆதரிக்கின்றேன்,

௧. “வேற்றுமையில் ஒற்றுமை” – காணுவோம் என்று ஜவஹர்லால் நேரு கூறிய இந்த பொன் மொழியை சொல்லி நாம் மார்தட்டி கொள்ள இயலாது! இன்று நம்மிடையே அரங்கேறி கொண்டிருப்பது “ஒற்றுமையில் வேற்றுமை” – உண்டு செய்வோம் என்றுதான், ஒரே மொழி, கலாச்சாரம், அடையாளங்கள் கொண்ட மக்களை பிரிப்பது கூடாது. “மொழி”யின் அடிப்படையில் மாநிலம் என்பது பொய்யாகிபோகும். இன்று நம்மை ஒன்று சேர்க்க ஒரு இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் இல்லாது போனாரே!

௨. தனி தெலுங்கான வேண்டும் என்று சொல்லுவதற்கான காரணங்கள் அனைத்தும் தெலுங்கானவைவிட ராயல்சீமவுக்கு தான் அதிகம் பொருந்தும். இந்த கருத்தை மேற்சுட்டிய அறிக்கையில் பல புள்ளி விவரங்களோடு பார்க்கலாம். உதாரணமாக, விவசாயம் குறைந்தது, தண்ணீர் இன்மை, வறட்சி, சிறந்த கல்வி கூடங்கள் இல்லாமை, பொருளாதார ரீதியாக பின்தங்கி இருப்பது இப்படி இன்னும் பல . . .

௩. தனி மாநிலம் உருவான பின் அந்த மாநிலம் முன்னேற்றம் என்பது ஒரு புறம் இருக்க, நாட்டிற்கும், பிற மக்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் என்ன பாதிப்புகள் இருக்கலாம் என்று பட்டியலிடுவது அவசியமாகிறது. அந்த வகையில் உடனடியாக எனக்கு தெளிவுபடுவது,
௩.௧. நதி நீர் பங்கிடு – பத்தோடு பிதினொன்று என்று இழுத்துக்கொண்டே போகும் அவ்வளவே!
௩.௨. நேர்முக/ மறைமுக வரிகள் மூலம் மக்கள் மேல் மேலும் பொருளாதார சுமைகள். உதாரணமாக, மாநில நுழைவு/ சுங்க வரி மக்களையே வந்து சேரும்.

௪. இன்று தனி தெலுங்கான என்று முடிவானால் நாளை தனி மாநிலங்களுக்கா காத்திருக்கும் கோரிக்கைகளையும் தூசி தட்ட வேண்டும் – இன்று இல்லையென்றாலும் கண்டிப்பாக ஒரு நாள் – அந்த ஒரு நாள் விரைவில் வராது என்பதற்கு யாராலும் எந்த உத்திரவாதமும் தர முடியாது.

௫. தனி மாநிலமாக உருவாதன் மூலம் கண்டிப்பாக முன்னேற்றம் உண்டு என்று சொல்லுவதற்க்கில்லை – சிறந்த உதாரணம் சத்தீஸ்கர், மாநிலம் உருவாகி ௧௦ ஆண்டுகள் நிறைவேருவதர்க்குள் ௪௦௦௦ கோடி ஊழல்! மற்றும் ஒரு உதாரணம் ஜார்க்ஹாந்து . . எந்த ஒரு பெரிய முன்னேற்றத்தையும் அடைந்து காட்டவில்லை.

பாட்டியை ஏமாற்றி வடையை தூக்கி கொண்டு போகும் காக்கைக்கு தெரியாது தானும் ஏமாற்ற படுவோம் என்று, கடைசியாக ஏமாற்றுகார குள்ள நரி(கள்) தான் சுவைக்க போகிறது! கதையில் ஒன்று மட்டும் நிச்சயமாகி போகிறது “பாட்டி ஏமாற்ற பட்டாள்!”

எந்த ஒரு செயலுக்கும் நேர் விசை எதிர் மறை விசை உண்டு. தனி மாநிலம் உருவாவதன் மூலம் ஏற்படும் நன்மைகள் உண்டு என்ற போதிலும் இந்த நன்மைகளை மட்டும் கருத்தில் கொண்டு செயல் படகூடாது, இந்த பிரிவினையால் ஏற்படும் எதிர் மறை செயல்களையும் கருத்தில் கொளுத்தல் அவசியமாகிறது.

Ingulab Zindabad

Ingulab Zindabad

நன்றி!

sri krishna committee report (from eenadu news paper, thanks http://www.eenadu.net) >>

India Day Parade, New York 2009 – Collection of photos >>

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s